#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 4 குண்டுவெடிப்பு சம்பவங்கள்; 16 பேர் உயிரிழப்பு...!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நான்கு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் ஷியா பிரிவினரை குறிவைத்து நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மசூதியில் மாலை நேர தொழுகை நடந்து கொண்டிருந்த பொழுது குண்டு வெடித்ததாக குறப்படுகிறது.
இதேபோல் Mazar i Sharif நகரில் மூன்று மினி பேருந்துகளில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை தாஹோஷ் இயக்கத்தின் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.