மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரேசிலை புரட்டியெடுத்த பேய் மழை.. நிலச்சரிவில் சிக்கி 130 பேர் மரணம், 200 பேர் மாயம்.!
தென்னமெரிக்காவில் உள்ள பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ மாகாணத்தில், கடந்த செவ்வாய்க்கிழமையின் போது 30 நாட்களில் பெய்யவேண்டிய மழை 3 மணிநேரத்தில் கொட்டித்தீர்த்தது. இந்த பேய் மழையால் அங்குள்ள ஆறுகள், ஏரிகள் போன்றவற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ள நீர் ஊருக்குழு புகுந்து வீடுகள் மூழ்கிய நிலையில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டனது. மேலும், அங்குள்ள மலைப்பிரதேச நகராக கருதப்படும் பெட்ரோபொலிஸ் பிராந்தியம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. சாலைகள் அனைத்தும் வெள்ளநீரால் சூழப்பட்டு இருப்பதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் இராணுவ வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், போர் முடிந்த பின்னர் ஊரில் ஏற்பட்டுள்ள பேரழிவு போல நிகழ்விடங்கள் இருப்பதாக அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ தெரிவித்தார். இந்நிலையில், பிரேசில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக 130 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 200 பேர் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.