பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நீர்வீழ்ச்சி படகு பயணத்தில் கீழே விழுந்த பெரிய பாறை.. 7 பேர் பலி, 32 பேர் காயம்.!
பிரேசில் நாட்டில் உள்ள தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் கேபிடோலியோ. இந்த நகரில் பர்னாஸ் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் பலரும் இந்நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவது வழக்கம்.
படகுகள் மூலமாக அருவிக்கு அருகே சுற்றுலாப்பயணிகள் செல்லும் நிலையில், நேற்று வழக்கம்போல பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறை ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது.
இந்த பாறை படகின் மீது விழுந்து விபத்து ஏற்படவே, படகில் இருந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயம் அடைந்து அலறித்துடித்தனர். படகில் ஓட்டை விழுந்து மூழ்க தொடங்கிய நிலையில், பலரும் அவசர கதியில் நீரில் குதித்து தப்பிக்க தொடங்கினர்.
இவர்களில் 20 பேர் மாயமாகி இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பிரேசிலில் கடந்த சில வாரமாக அதிக மழை பெய்து வரும் நிலையில், அதனால் பாறைச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.