மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவி... மனைவிக்கு போதைப் பொருள்... 51 நபர்கள் பாலியல் பலாத்காரம்... கணவர் செய்த கொடூரச் செயல்..!
பிரான்ஸ் நாட்டில் மனைவிக்கு தினமும் போதை மருந்து கொடுத்து அவரை மற்ற நபர்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு தினமும் போதை பொருட்களை கொடுத்து இருக்கிறார். அந்த போதை பொருள்களினால் அவரது மனைவி மயங்கியதும் மற்ற நபர்களை அழைத்து வந்து அவருடன் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். இவ்வாறாக 51 நபர்கள் அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த கொடுமையான சம்பவம் 2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது. மேலும் போதை மயக்கத்தில் இருக்கும் தன் மனைவியை பிற நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்வதை வீடியோ பதிவும் செய்து வைத்திருக்கிறார் அந்த நபர்.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள பிரான்ஸ் காவல் துறை அவரிடமிருந்து வீடியோக்களின் மூலம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 51 நபர்களையும் கைது செய்து இருக்கிறது. இந்த சம்பவம் உலகெங்கிலும் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.