#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உல்லாசத்துக்கு ஊரான் வீட்டு பொண்ணு; கல்யாணதுக்கு உறவுக்காரன் பொண்ணு.. திருமணமான 3 வது நாளே தில்லாலங்கடி மாப்பிள்ளை கைது..!
புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் வாஞ்சிநாதன் வீதியை சேர்ந்தவர் கணேஷ்(26 ). இவர் தான் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண்ணை கடந்த 9 மாதமாக காதலித்து வந்துள்ளார்.
மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு ஒரு சில தினங்களில் தன் காதலிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்த அவரது காதலி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் புதுவையில் உள்ள லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் கணேஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுவையில் காதலியை ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டு அடுத்த சில நாளில் வேறு பெண்ணை மணமுடித்த புது மாப்பிள்ளையை திருமணம் ஆன 3 நாளில் காவல்துறையினர் கைது செய்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.