ஆசன வாயில் கருவி வைத்து முறைகேடு; குளியல் தொட்டியில் மலம் கழித்ததால் சிக்கிக்கொண்ட பரிதாபம்.!



china-chess-completion-man-cheating

 

சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற செஸ் டோர்னமெண்ட் போட்டியில் 48 வயதுடைய யான் செங்கிலாங் என்பவர் வெற்றி அடைந்தார். முடிவில் அவருக்கு பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம் பணம் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 17-ம் தேதி அவர் அதிகமாக குடித்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சரியான நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லத் தவறிய நிலையில், வேறுவழியின்றி குளியல் தொட்டியில் மலம் கழித்துள்ளார்.

அப்போது சக வீரருக்கு அவர் ஆசனவாயில் வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர் போன்ற சாதனத்தை வைத்துக்கொண்டு மோசடி செய்து செஸ் போட்டியில் வென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் அதிகாரிகளிடம் கூறவே விசாரணையில் உண்மை அம்பலமாகியது. 

தற்போது சீன செஸ் வாரியம் அவருக்கு கொடுத்த தொகையை மீண்டும் திரும்ப பெற்றிருக்கிறது. மேலும் அவர் 40 ஆண்டு காலம் செஸ் போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.