மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முத்தம் கொடுத்தால், காது கேட்கும் திறன் பாதிப்பு.! காதலர்களுக்கு அதிர்ச்சி.!
சீன நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர், லிப் லாக் முத்தம் கொடுத்த காரணத்தால் தனது காது கேட்கும் திறனை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முத்தம் கொடுப்பதால் ஒரு நபர் உடலில் உள்ள அதிக கலோரிகளை இழப்பதாகவும், அதே நேரத்தில் முத்தம் கொடுக்கும் போது நம் உடலில் அதிகப்படியான நரம்புகள் உணர்ச்சி வயப்படுகின்றன என்றும் அறிவியல் ரீதியாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதுபோன்ற முத்தத்தை அடிப்படையாகக் கொண்டு நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சீன நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி முத்தமிட்டு கொண்டிருந்தது. அந்த நேரத்தில் காதலனுக்கு திடீரென்று கடுமையாக காது வலி ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அவர் காது கேட்கும் திறனும் குறைந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் முத்தமிட்டு கொள்ளும்போது அதிகப்படியாக உணர்ச்சி வசப்பட்டதால் காது சவ்வில் துளை ஏற்பட்டுள்ளது என்றும், இந்த தாக்கத்திலிருந்து அவர் முழுமையாக குணமடைய இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.