பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#Metoo? நான் பாலியல் பலாத்காரத்தால்., - பிரபல டென்னிஸ் வீராங்கனை பகீர் அறிவிப்பு.!
பிரபல சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷிவாய் முன்னாள் துணை அதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை குற்றசாட்டை முன்வைத்து பின்னர் அதனை மறுத்துள்ளார்.
சீனாவின் டென்னிஸ் வீராங்கனை பெங் ஷிவாய் (Peng Shuai). இவர் கடந்த கடந்த மாதத்தின் போது தன்னை சீன முன்னாள் துணை பிரதமர் ஜாங் ஹோலி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டியதாக தெரியவருகிறது. இந்த பதிவை அவர் சீன சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாகவும் கூறப்படும் நிலையில், பதிவுகள் சில மணிநேரத்தில் மீண்டும் அழிக்கப்பட்டன.
மேலும், இந்த விஷயத்தை வெளியிட்ட பின்னர், டென்னிஸ் வீராங்கனை பெங் ஷிவாய் 3 வாரத்திற்கு எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என்ற ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது. இதனால் அவர் உண்மையில் முன்னாள் சீன துணை பிரதமரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அவரை பின்தொடர்ந்து வந்த பலரும் அக்கருத்தையே கூறியிருந்தனர்.
இந்த நிலையில், 3 வாரம் திடீர் மாயத்திற்கு பின்னர் சிங்கப்பூர் பத்திரிக்கைக்கு நேற்று வீடியோ வாயிலாக பேட்டியளித்த பெங், "தன்னை யாரும் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. தனது கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார். பாலியல் பலாத்காரம் தொடர்பான தகவல் தெரியப்படுத்திய பின்னர், அவர் மாயமானது கவலையை ஏற்படுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விஷயங்களை கருத்தில் கொண்ட சீன மகளிர் டென்னிஸ் சங்கம், சீனாவில் நடைபெறவிருந்த போட்டிகளை இடைநிறுத்தியது. இதுகுறித்த விசாரணை நடந்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது.