தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஐரோப்பாவில் முடிவுக்கு வருகிறது கொரோனா..! சளி போன்ற பருவ நோயாக மாறும்: உலக சுகாதார அமைப்பு
தற்போதைய ஒமிக்ரான் அலை தணிந்தவுடன் ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவை நெருங்கும் தருவாயில் இருப்பதாக ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹேன்ஸ் கிளட்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவை நோக்கி செல்கிறது. மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பாவில் 60% பேரை ஒமைக்ரான் தொற்றிவிடும். அதன்பின் ஒமைக்ரான் அலை குறைந்தவுடன் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் தொற்று பாதிப்பு மிகவும் குறைந்துவிடும் என அவர் கூறினார்.
டெல்டா வகை கொரோனாவைவிட ஒமைக்ரான் வகை தொற்றின் பாதிப்பு குறைவாக இருப்பதாக கூறிய அவர் பெருந்தொற்று என்ற நிலையிலிருந்து சளி போன்ற பருவ நோயாக மாறக்கூடும் என் குறிப்பிட்டார். எனினும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் ஹேன்ஸ் கிளட்ஜ் கூறினார்.