#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட பாவி.. தூண்டிலில் சிக்கிய மீனை டபக்கென வாயில் கவ்விய இளைஞர்.. அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி..
மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவரின் தொண்டையில் மீன் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியா நாட்டில் பிவிஜய் (Pivijay) என்னும் பகுதியில் 24 வயது இளைஞர் ஒருவர் மீன் பிடிக்க சென்றுள்ளார். தூண்டிலை வீசி அவர் மீன் பிடித்தபோது அவரது தூண்டிலில் மீன் ஒன்று சிக்கியுள்ளது. இந்நிலையில் தூண்டிலில் இருந்து அவர் அந்த மீனை வெளியே எடுக்க முயற்சித்தபோது அவரது மற்றொரு தூண்டிலில் வேறொரு மீன் சிக்கியுள்ளது.
இதனால் இரண்டாவது மீனையும் அவர் வெளியே எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது முதலில் சிக்கிய மீனை வெளிய எடுத்து, அது தப்பி சென்றுவிடாமல் இருக்க அதனை தனது வாயில் வைத்து கவ்விக்கொண்டு இரண்டாவது மீனை எடுத்துள்ளார். அப்போது அவரது வாயில் இருந்த மீன் நழுவிக்கொண்டு அவரது வாய்க்குள் சென்று தொண்டையில் சிக்கிக்கொண்டது.
இதனை அடுத்து அருகில் உதவிக்கும் ஆள் இல்லாதநிலையில் அந்த இளைஞர் தனி ஆளாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இளைஞரின் நிலையை புரிந்துகொண்ட மருத்துவர்கள், அவரது தொண்டை பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு அவரது தொண்டையில் சிக்கியிருந்த சுமார் 7 இஞ்சு மீனை வெளியே எடுத்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.