மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பக்கத்து வீட்டில் கதைபேசிய தாய்! இரட்டை குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! துயர சம்பவம்!
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் எலைன் நோவோஸ். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். இந்த நாய் மிகவும் சாந்தமான குணத்துடன், அனைவரிடம் பாசமாகவும், மிகவும் மென்மையாகவும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் எலைன் நோவாஸ் சமீபத்தில் பிறந்து 26 நாட்களே ஆன தனது இரட்டை குழந்தைகளை விட்டுவிட்டு பக்கத்து வீட்டாருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனிடையே பிஞ்சு குழந்தைகள் இருவரின் அலறல்சத்தம் கேட்டு, அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே ஓடிச்சென்று பார்த்துள்ளார். அங்கு நாய் தனது இரு குழந்தைகளையும் கொடூரமாக தாக்கியநிலையில் இருந்துள்ளது.
இதனைக் கண்டு பதறிப்போன எலைன் நாயை விரட்டிவிட்டு படுகாயமடைந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு காயமடைந்த ஒரு குழந்தை பலியானது. மற்றொரு குழந்தை மாரடைப்பால் சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது.
இந்நிலையில் மிகவும் பாசத்துடன் இருந்த நாய் இரட்டை குழந்தைகள் பிறந்த பிறகு, தனது உரிமையாளரிடமிருந்து பாசத்தை இழந்து பொறாமைபட்டதாக கூறப்படுகின்றது. அதனாலேயே அது குழந்தைகளை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மகள்களை பரிதாபமாக இழந்த எலைன் மீளமுடியாத அதிர்ச்சியில் உள்ளார் இச்சம்பவம் குடும்பத்திலேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.