அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இப்படி ஒரு பழக்கமா..? வெளியான சுவாரசிய தகவல்.!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாட்கள் சுற்று பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் உலக நாடுகளுக்கே வல்லரசு நாடக கருதப்படும் அமெரிக்காவிற்கே அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப்பின் உணவு பழக்கவழக்கம் குறித்து சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ட்ரம்பிற்கு மது அருந்துவது என்பது சுத்தமாக பிடிக்காதாம், அதேபோல், மது அருந்துபவர்களையும் அவருக்கு பிடிக்காதாம். மது மட்டும் இல்லாமல், சிகரெட் பிடிக்கும் பழக்கமோ, வேறு ஏந்த வகையிலான போதைப்பழக்கமோ ட்ரம்புக்கு கிடையாது எனக் கூறப்படுகிறது.
ட்ரம்பிற்கு மிகவும் பிடித்த உணவுகளில் டயட் கோக் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. அதேபோல, பீட்சா, சாக்லேட் மில்க் ஷேக், கடல் உணவுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவையும் ட்ரம்பின் விருப்பப்பட்டியலில் உள்ள உணவுகளாகும்.