96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஓடும் பேருந்தில் வலியால் துடிதுடித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போலீஸார்கள்! குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
அர்ஜெண்டினாவில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது திடீரென அவருக்கு எதிர்பாராதவிதமாக கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகவலறிந்து பேருந்தில் ஏறிய மூன்று போலீசார்கள் ஓடும் பேருந்தில் ஏறி, உடனேஅந்த பெண்ணிற்கு பிரசவம் பார்க்க துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் சற்று நேரத்தில் பேருந்திலேயே அந்தப் பெண்ணிற்கு 3.3 கிலோ கிராம் எடையுள்ள அழகிய பெண் குழந்தை பிறந்தது. மேலும் குழந்தை வீறிட்டு அழுத நிலையிலும், பேருந்திலேயே தனக்கு பிரசவமானதால் அந்த பெண் அப்படியே திகைத்துப் போய் அமர்ந்து இருந்துள்ளார். இந்நிலையில் ஆண் போலிசார் ஒருவர் குழந்தையை வாங்கி அள்ளி அணைத்து தாலாட்டியுள்ளார்.
பின்னர் அவர் சாதாரண நிலைக்கு வரவே குழந்தையை போலீசார் அந்தப் பெண்ணிடம் கொடுக்கின்றனர். அதனை வாங்கிக் கொண்டு அவர் மகிழ்ச்சி பொங்க மார்போடு அணைத்துக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்தத் தாய் குழந்தைக்கு Milagros(Miracle) அதாவது அற்புதம் என பெயர் வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து குழந்தையும், தாயும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.