மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ச்சைக்.. "அதுக்காக" இப்படியெல்லாமா செய்வாங்க?.. 55 வயது நபரின் காதை கடித்து விழுங்கிய பாலியல் தொழிலாளி..! பகீர் சம்பவம்..!!
தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் கன்னிகா காம்ப்டன் (வயது 25). பாலியல் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவதினத்தன்று அளவுக்கு அதிகமாக மது குடித்த கன்னிகா, நடக்க கூட முடியாமல் திணறியுள்ளார். அத்துடன் பட்டாயா பகுதியில் உள்ள சின்சிட்டியில் பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார்.
இதனை தொடர்ந்து 55 வயதுடைய சுற்றுலா பயணி ஒருவர் அவர் அருகில் அமர்ந்துள்ளார். மது போதையில் இருந்த கன்னிகா சுற்றுலா பயணியை முறைத்து பார்த்தபடி தனது பல்லை கடித்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் திடீரென சுற்றுலா பயனியின் காதை பயங்கரமாக கடித்து குதறியுள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் சுற்றுலாப் பயணி துடித்துடித்து கதற, சக பயணிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது சார்பில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரை ஏற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னிகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து லெப்டினென்ட் கர்னல் சாய்ஜாய் காம்சுலா கூறுகையில், "மது போதையில் காதை கடித்து விழுங்கிய பெண்ணை கைது செய்துள்ளோம். கைது நடவடிக்கையின் போது பெண் போலீஸ் அதிகாரியையும் அவர் காலால் உதைத்து கடுமையாக தாக்கினார். பாலியல் தொழில் செய்து வரும் இவர் சம்பவதினத்தன்று அதிக மது போதையில் இருந்ததால் காதை கடித்தாரா? என்று விசாரணை நடத்தி வருகிறோம். இருப்பினும் இது குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை" என தெரிவித்தார்.