ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி; சரிவை சந்தித்த Block நிறுவன பங்குகள்.. சோகத்தில் நிறுவனர்.!
ப்ளாக் நிறுவனத்தின் பணியாளர்கள் முறைகேடு, மோசடியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதன் பங்கு சரிவை சந்தித்துள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை என்று கூறினாலே உள்நாடு முதல் வெளிநாடு வரை பலருக்கும் பதறவைக்கும் அறிக்கையாகவே இருக்கிறது. ஏனெனில், ஹிண்டன்பர்க் அறிக்கை எந்த செல்வந்தருக்கு எதிராக வெளியாகிறோயதோ, அவரின் நிதிநிலைமை சரிவுகளை சந்திக்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் ஹிண்டன்பர்க் பிளாக் நிறுவனம் தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு இருந்தது. அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தது. இந்த நிலையில், பிளாக் நிறுவனம் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
பிளாக் நிறுவனத்தின் உரிமையாளரான ஜாக் டோர்ஸியின் சொத்து மதிப்பு 4.9 பில்லியன் என்ற அளவில் இருந்த நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின்னர் பங்குகள் 11% சரிந்து 4.4 பில்லியன் டாலர் என்ற நிலையில் உள்ளது. நேற்று ஒரேநாளில் 526 (ரூ.4327 கோடி) பில்லியன் டாலர் சரிவில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.