மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு, உக்ரைன் இந்திய தூதரகம் முக்கிய வேண்டுகோள்.!
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்து சென்று போர் தொடுத்துள்ளதால் உலகளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் கல்வி மற்றும் வேலைக்காக என சென்ற 20 ஆயிரம் இந்தியர்கள் தவித்து வரும் நிலையில், மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன், இந்தியர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உக்ரைனின் அண்டை நாடுகள் வழியே இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று தெரியவருகிறது. தமிழக அரசு தமிழ்நாடு மாணவர்களை மீட்க செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனின் எல்லைப்பகுதிகளுக்கு சென்றால் அதிகாரிகள் நம்மை மீட்டுவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இந்தியர்கள் வெளியேறி சென்றால், அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவி இல்லாமல் மாணவர்கள் எங்கும் செல்ல வேண்டாம், அதிகாரிகள் தங்களை தொடர்பு கொண்டு பேசிய பின்னரே அவர்களுடன் செல்ல வேண்டும் என இந்திய அரசு றிவுறுத்தியுள்ளது.
மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தாங்கள் தற்போது தங்கியிருக்கும் இடங்களிலேயே இருக்க வேண்டும் என்றும், படிப்படியாக அனைவரும் மீட்கப்படுவீர்கள் என்றும் இந்திய அரசு மற்றும் உக்ரைன் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. எல்லைகளிலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், மாணவர்கள் மீட்பு தொடர்பாக ஒவ்வொரு கட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தி மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.