திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அறிவுரை கூறியே கோடியில் சம்பளம் வாங்கும் இளம் பெண்.. எங்கு தெரியுமா.?
இங்கிலாந்தில் இளம் பெண் ஒருவர் அறிவுரை கூறிய மாதம் கோடி கணக்கில் சம்பாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரோமா என்ற இளம் பெண் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை மையத்தில் புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
குழந்தை பிறந்த பிறகு ஈசியாக எப்படி தூங்க வைப்பது?, குழந்தைக்கு எப்படி முறையாக தாய்ப்பால் கொடுப்பது?, அதேபோல் சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு எப்படி கொடுப்பது?, குழந்தைகள் அடம்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?, குழந்தைகளை புத்திசாலிகளாக எப்படி வளர்க்க வேண்டும்?, குழந்தைகளிடம் எப்படி அணுக வேண்டும்?, குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும் மற்றும் எப்படி பழக வேண்டும? பல்வேறு விதமான தகவல்களை அவர் கொடுக்கிறார்.
இந்த ஆலோசனைக்கு பெற்றோர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு கவுன்சிலிங் செய்ய 40 ஆயிரம் ரூபாய் வரை அவர் வசூல் செய்வதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் ஒரு மாதத்திற்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த தகவல் இளம் வயதினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தற்போதைய காலகட்டத்தில் கணினி துறையில் வேலை பார்ப்பவர்கள் கூட இவ்வளவு சம்பளத்தை வாங்காத போது, வெறும் அறிவுரை கூறிய சம்பாதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.