மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது கொரோனாவின் 9-வது அலை.. Eris மாறுபாடு கொரோனா அச்சத்தில் உலகநாடுகள்.!
கடந்த 2021ம் ஆண்டு முதல் மக்களை வாட்டி வதைத்து வந்த கொரோனா தொற்று பரவலில் இருந்து நாம் விடுபட்டதாக நினைத்தாலும், அது மனித இனத்தை விடுவதாக தெரியவில்லை.
கொரோனா பரவலின் போதே உலக சுகாதார அமைப்பு பல கட்டமாக கொரோனா உருமாறி பரவும் என தெரிவித்து இருந்தது. தற்போது வரை எட்டு அலைகளாக பரவிய கொரோனா மீண்டும் உருமாறி 9வது அலையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் 9வது அலை உறுதி செய்யப்பட்டு, அதற்கு Eris Variant என ஆய்வாளர்கள் பெயரிட்டு அடையாளப்படுத்தியுள்ளனர்.
இந்த மாறுபாடு கொண்ட கொரோனா முதலில் இங்கிலாந்தில் ஜூலை 31ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள்ளாக ஆசியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வகை கொரோனா விரைந்து பரவும் தன்மை கொண்டது என்பதால், முந்தைய கொரோனா பாதிப்புகளை விட விகிதத்தில் அதிகம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வகை கொரோனா பெரிய உயிரிழப்பை ஏற்படுத்துமா என ஆய்வுகள் நடந்து வருகின்றன. மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"தனித்திரு, விழித்திரு, முகக்கவசம் அணிந்து உயிரை பாதுகாப்போம்".