மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பாவி விவசாயிகள் 110 பேர் கழுத்தறுத்து கொலை! அதிர்ச்சி சம்பவம்.!
நைஜீரிய நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு நைஜீரியா பகுதிகளில் அவர்களது ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போர்னொ ஸ்டேட் அருகே உள்ள கோசிப் என்ற கிராமத்தில் பலர் விவசாய பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.
அங்கு விவசாய பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களிடம் நெருங்கி வந்த ஒருவன் உணவு தரும்படி கேட்டுள்ளான். அவனை விவசாயிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் பயங்கரவாதிகள் கும்பலாக வந்து விவசாயிகளை கடுமையாக தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
At least 110 dead in Nigeria after suspected Boko Haram attack https://t.co/kBLbOPmEr0
— The Guardian (@guardian) November 29, 2020
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 110 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். இதனை, உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் அந்த கிராமத்தில் இருந்த பெண்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நைஜீரியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.