மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா எடைக்கு நிகரான தங்கமா...மகளின் திருமணத்திற்கு தந்தை கொடுத்த சீர்... வாயை பிளக்கும் இணையவாசிகள்!!
திருமண நிகழ்வு என்று வந்தாலே மகளுக்கு என்ன சீர் வரிசை செய்கிறார்கள் எத்தனை பவுன் தங்கம் போட்டு மகளுக்கு திருமண செய்கிறார்கள் என்று தான் பலபேர் கேட்பதுண்டு. சிலர் பெண்ணுக்கு இத்தனை பவுன் தங்கம் போட்டே ஆக வேண்டும் என்று வரதட்சணை கேட்பதுண்டு. அவர்கள் கேட்கும் வரதட்சணை கொடுக்க முடியாமல் போகும் போது சில மன கசப்புகள் ஏற்படுவது உண்டு.
இந்நிலையில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளின் திருமண நிகழ்வில் மகளின் எடைக்கு சமமான எடை அளவு கொண்ட தங்கத்தை சீர்வரிசையாக கொடுத்துள்ளார். இந்நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு என்று தயாரிக்கப்பட்ட தராசின் ஒரு புறத்தில் மணப்பெண் அமர்ந்திருக்க மற்றொரு புறத்தில் தங்கத்தை அடுக்கி வைத்து நிகர் செய்துள்ளார் அந்த தொழிலதிபர். அதன்படி சுமார் 70 கிலோ தங்கம் சீர் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.