மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: 41 கைதிகள் பரிதாப பலி.!
இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் தீ விபத்து ஏற்பட்டு கைதிகள் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள தங்கெராங்க சிறையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து நடந்த கட்டிடத்தில் 122 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் விபத்தில் சிக்கி கைதிகள் உள்பட 41 பேர் பலியாகினர். படுகாயமடைந்த மேலும் 40 பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருந்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.