மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
101 பயணிகளுடன் சென்ற விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது!.
மெக்சிகோவின் துராங்கோ விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோ நகரை நோக்கி 97 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று சில நிமிடங்களில் விமான நிலையம் அருகே உள்ள வயலில் விழுந்து நொறுங்கியது.
இதில் அந்த விமானத்தில் பயணித்த 101 பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். 97 பயணிகள் மற்றும் நான்கு ஊழியர்களுடன் சென்ற இந்த விமானம் திடீரென விமான நிலையத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் உள்ள ஒரு வயல் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அப்போது அந்தவிமானம் தரையில் மோதி நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்து காயமடைந்த பயணிகளை மீட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பயணிகள் யாருக்கும் உயிர்சேதம் இல்லாமல் தப்பியுள்ளார்.
Ante el percance ocurrido en el Aeropuerto Guadalupe Victoria de Durango he solicitado a los cuerpos de seguridad y emergencias atiendan el lamentable accidente. Oficialmente no hay cifras de heridos o fallecidos. En breve se darán a conocer los detalles de las acciones de apoyo.
— José R. Aispuro T. (@AispuroDurango) 31 July 2018
இரண்டு பயணிகள் மட்டும் கடுமையாக காயமடைந்துள்ளதாக, டர்மானோ மாநில குடிமக்கள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான ஃபெர்னாண்டோ ரியோஸ், பிரபல தொலைக்காட்சியில் தெரிவித்தார்.