மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏலியன்ஸ் பராக் பராக்: 3 விரல்களுடன் 2 மம்மிகள்! மிரளவைக்கும் உண்மை சம்பவம்!!
வேற்றுகிரக வாசிகளின் உடல்கள் என்று நம்பப்படும் 2 மம்மிகள் மெக்சிகோவில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இது கடந்த 2017-ம் ஆண்டு பெரு நாட்டின் அகழ்வின் போது விசித்திரமான உருவத்தில் இருக்கும், பதப்படுத்தப்பட்ட இரண்டு மம்மிகள் கிடைத்துள்ளன.
அந்த மம்மிகளின், உடல்கள் பற்றி கார்பன் டேடிங் போன்ற சோதனைகளை ஆரய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர், அப்போது ஒரு உடல் சுமார் 1800 ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
2 வது மம்மி 700 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்டது என்றும் கண்டறிந்தனர். இந்த இரண்டு மம்மிகளும், சாதாரண மனிதர்கள் உருவத்தை விட வினோதமாக காணப்படும். இவர்களது தலையானது நீண்டு காணப்படுகிறது. அதன் ஒவ்வொரு கையிலும் 3 விரல்கள் மட்டுமே உள்ளன.
இதுநாள் வரை இவைகளை மனிதர்கள் என்ற வரிசையில் வைக்காமல் வேறு வகையான உயிரினம் என்று வகைப்படுத்தி வைத்திருந்தனர். கடந்த ஏழு வருட காலமாக இந்த உடல்கள் வேற்று கிரக மனிதர்களின் உடல்களாக இருக்குமோ? என்ற கண்ணோட்டத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அது மனிதர்கள் அல்ல என்று உறுதி செய்து, உடல்களை தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தும் நோக்கத்தில் மம்மிகள் மெக்சிகோவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, அவ்விரண்டு மம்மிகளின் மரபணுக்களை ஆய்வு செய்து, பின் அவை வேற்றுகிரக வாசிகளுடையதா? என்பதை தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் விரைவில் நிரூபணம் செய்ய உள்ளனர். இந்த ஆய்வு வெற்றி பெறுமேயானால் பூமியில் வேற்று கிரகவாசிகளின் உறுப்பை கண்டறிந்த முதல் நாடு என்னும் பெருமையை மெக்சிகோ தன்வசப்படுத்திக்கொள்ளும்.