மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 மாடி குடியிருப்பில் இருந்து குழந்தைகளை தூக்கி வீசிய தம்பதி.! உயிரைக் காப்பாற்ற துணிகரம்.!
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள 16வது தளம் கொண்ட குடியிருப்பு பகுதியிலிருந்து குழந்தைகளுடன் தம்பதிகள் கீழே குறித்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
கஜகஸ்தான் நாட்டில் தீ விபத்து ஏற்பட்ட காரணத்தால் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் மாடியில் இருந்து தங்களது குழந்தைகளை பெற்றோரே தூக்கி வீசி உள்ளனர். அல்மாட்டி நகரில் இருக்கின்ற 16 தளங்கள் கொண்ட ஒரு குடியிருப்பு பகுதியில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கின்றது.
அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போன பெற்றோர் தீயில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை மாடியில் இருந்து கீழே வீசினார்கள். குழந்தைகளை தொடர்ந்து தாங்களும் அங்கிருந்து குதித்துள்ளனர்.
அவர்கள் குதித்த போது கீழே இருந்த மக்கள் மெத்தை, போர்வை உள்ளிட்டவற்றை கொண்டு அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அது காண்போரை பதற வைத்துள்ளது.