மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2 நாட்களில் 390 பேர் கோர மரணம்: காசாவில் தொடரும் வான்வழி தாக்குதல்.!
கடந்த அக்.07ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. பாலஸ்தீனியத்தின் காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இதனால் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். தற்போது வரை போரில் 20,057 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 53,320 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், காஸாவில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வான்வழி தாக்குதலில் சிக்கி 390 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 734 பேர் கூடுதலாக படுகாயம் அடைந்துள்ளாதாகவும் காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.