குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
உஷார்.! ஒரு கொசு கடித்ததால் இளம்பெண்ணுக்கு இப்படியொரு பயங்கரமான நிலையா? சில நிமிடங்கள் நின்றுபோன இதயத்துடிப்பு.!
பிரிட்டானியா எஸ்செக்ஸ் என்ற பகுதியில் வசித்து வருபவர் கிம் ராபின்சன்.25 வயது நிறைந்த அவர் துணிகளை துவைத்து வீட்டின் பின்புறம் காயப்போட்டுள்ளார். அப்பொழுது அங்கு அவரை ஒரு கொசு கடித்துள்ளது. இந்நிலையில் அவருக்கு அந்த இடத்தில் கடுமையான அரிப்பு ஏற்பட்டுள்ளது. மறுநாள் கல் முழுவதும் பயங்கரமாக வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது குடும்பத்தார்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஆனால் கொசு கடித்த காயத்தின் வழியே ஆபத்தான கிருமிகள் உடலுக்குள் நுழைந்த நிலையில் உடல் முழுவதும் பயங்கரமாக வீங்க துவங்கியது. இதனை தொடர்ந்து அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில் கொசு கடித்ததன் மூலம் உடலில் நச்சுக்கிருமி பரவியதால் அவரது காலை முழுவதும் அகற்ற வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் உடல் முழுவதும் பரவிய நச்சுக்கிருமியின் பாதிப்பு இதயம் துடிப்பதை நிறுத்தியுள்ளது.மேலும் அவர் இறந்து போய்விட்டதாக மருத்துவர்கள் கருதிய நிலையில் திடீரென மூன்று நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அவரது இதயம் துடிக்கத் தொடங்கியது. பின்னர் காலில் உள்ள பாதிக்கப்பட்ட சில பகுதிகளை அகற்றிய மருத்துவர்கள் வயிற்றிலிருந்து தோலை எடுத்து காலில் வைத்து அறுவை சிகிச்சை செய்தனர்.
பின்னர் கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட கிம் ஐந்து நாட்களுக்குப் பிறகு எழுந்தார். இவ்வாறு ஒரு கொசு கடித்ததால் உயிரிழப்பு வரை சென்ற சம்பவம் அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது கால்களை முழுவதும் சரிசெய்ய இன்னும் சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.