மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அழுக்குத் துணி கூடைக்குள்.. மூச்சு முட்ட கிடந்த சிறுமி.. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
அமெரிக்க நகரம் ஒன்றில், தன் சகோதரர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, அழுக்குத் துணிகள் போடும் கூடைக்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க நாட்டின் அலபாமா மாகாணத்தில் அமைந்துள்ள Trussville என்னும் பகுதியில் கோல் தெரேசா (Khloe Teresa) என்ற சிறுமி தன்னுடைய சகோதரன் மற்றும் சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய் உள்ளார்.
சிறுமியை காணாமல் பெற்றோர் அங்கும், இங்கும் தேடிய நிலையில் அழுக்கு துணி போடக்கூடிய கூடைக்குள் அந்த சிறுமி சுயநினைவு இல்லாமல் மயக்கம் அடைந்து கிடந்ததை பெற்றோர் கண்டறிந்தனர். உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்த நிலையில், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியில் ஆளாகியுள்ளனர்.