இசைக்கச்சேரியில் கலந்துகொள்ள சென்ற இஸ்ரேலிய பெண்ணை பிணையக்கைதியாக பிடித்துச்செல்லும் ஹமாஸ்: கதறியழும் இளம்பெண்..! 



Hamas Terrorist Group Kidnapped Singer 

 

இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் குழு நேற்று (அக்.07, 2023) முழுவீச்சில் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இஸ்ரேலிய படைகள் தங்களின் பதில் தாக்குதலை கையில் எடுத்துள்ளது. 

இதனால் இருதரப்பு முக்கிய நகரங்கள் குறிவைத்து தாக்கப்படும் நிலையில், உயிர்-சேதங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, இருதரப்பிலும் 500 பேர் உயிரிழந்து இருக்கலாம் என தெரியவருகிறது. 

இஸ்ரேலிய படையினர் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலால், காசா நகரமே குண்டுமழையால் பதைபதைக்கிறது. முதலில் ஹமாஸ் வான்வழி தாக்குதல் நடத்தியபோது, சில இடங்களில் குண்டுகள் விழுந்த நிலையில், சுதாரித்த இஸ்ரேலிய அரசு பதில் தாக்குதல் மேற்கொண்டு வானிலே பல ஏவுகணைகளை தடுத்து அழித்தது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் தேவையான உதவியை செய்ய முன்வருவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள காசா பகுதியில் இருந்த நோயா என்ற பாடகி ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டார். 

அவருடன் வந்தவரும் பிணையக்கைதியாக்கப்பட்ட நிலையில், பெண்மணி மட்டும் தனியே வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். அவர் கண்களில் அழுகையுடன், பெரும் பயத்துடன் வாகனத்தில் செல்லும் பதைபதைப்பு வீடியோ வெளியாகியுள்ளது.