பாகிஸ்தானில் இந்து பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலை!.. பாகிஸ்தான் சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் இந்தியா..!!



Hindu woman beheaded and killed in Pakistan... India must protect Pakistan's minorities

பாகிஸ்தானில் உள்ள சிஞ்சோரா நகரில் 40 வயதான ஒரு இந்து பெண், தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தநிலையில், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அதற்கு அவர் கூறியதாவது:- 

குறிப்பிட்ட அந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை என்னிடம் இல்லை. எனவே அதுபற்றி கருத்து தெரிவிக்க முடியாது. கடந்த காலங்களில், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது நலன்கள், பாதுகாப்பில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தியா சொல்லி இருக்கிறது. அதையே மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று அவர் கூறினார்.