96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மனைவி கொடுத்த உணவில் இருந்த தலைமுடி! ஆத்திரத்தில் மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை!
வங்கதேச நாட்டின் ஜோய்பூரட் பகுதியைச் சேர்ந்தவர் பப்ளு மொண்டல். நேற்று காலை அவரது வீட்டில் பப்ளு மொண்டலின் மனைவி உணவை பரிமாறியுள்ளார். இந்தநிலையில் அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சாப்பாட்டில் தலை முடி இருந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பப்ளு பிளேடை எடுத்து மனைவியின் தலையை வலுகட்டாயமாக மொட்டையடித்தார். இதனால் வலி தாங்க முடியாமல் அவருடைய மனைவி அலறி உள்ளார். பப்ளுவின் இரக்கமற்ற கொடூர செயல் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பப்ளு மீது குற்றம் இருப்பதை உணர்ந்த போலீசார் அவரை கைது செய்தனர். பப்ளு மொண்டலுக்கு அதிகபட்சமாக 14 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவமானது வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.