#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிவேக பயணம்.. சாலை விபத்தில் 4 இந்தியர்கள் கனடாவில் மரணம்.. எலக்ட்ரிக் வாகனத்தில் இப்படியும் ஒரு பேராபத்து.!
கனடா நாட்டில் உள்ள டொரோண்டோவில் நடைபெற்ற சாலை விபத்தில், 4 இந்தியர்கள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இரண்டு உறவினர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் என 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரும் அதிவேகத்துடன் டெஸ்லா காரில் பயணம் செய்த நிலையில், கார் விபத்தில் சிக்கியபோது முழுவதும் உருக்குலைந்து, எரிந்து நால்வரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் நால்வரும் கேட்டா கோஹில் (வயது 30), நில் கோஹில் (வயது 26), திக்விஜய் படேல், ஜெய் சிசோடியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கணவன் - மனைவி சண்டையில் 23 வது மாடி ஏசி யூனிட்டில் உட்கார்ந்த குழந்தைகள்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
கார் விபத்திற்குள்ளாகி வெடித்துச்சிதறி சோகம்
குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர்கள், காரில் பயணம் செய்யும்போது அதிவேகத்தில் சென்று சாலை கான்கிரீட் அமைப்பில் மோதியுள்ளனர். இதனால் வாகனம் தூக்கி வீசப்பட்டு, மீண்டும் ஒருமுறை கான்கிரீட் மீது மோதியுள்ளது. இதில், வாகனத்தில் இருந்த பேட்டரிகள் வெடித்துச்சிதறி, 30 அடி தூரத்திற்கு தீப்பிழம்பு வெளிப்பட்டுள்ளது.
காரில் பயணம் செய்த 20 வயது பெண்மணி மட்டும் வழிப்போக்கர்களால் உடனடியாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மட்டும் அதிஷ்டவசமாக காயத்துடன் உயிர்தப்பினார். லித்தியம்-அயன் பேட்டரிகளின் வெப்ப-தீவிர தன்மை காரணமாக, அவை விபத்து அல்லது பிற விஷயங்களால் வெடித்துசிதறும்போது அளவுக்கு அதிகமான நீர் அதனை அணைக்க தேவைப்படும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
#UPDATE: Siblings identified in Toronto Crash involving Tesla that killed four. (PHOTO: 30-year-old Keta Gohil & 26-year-old Nil Gohil). The other individuals identified are Digvijay Patel, and Jay Sisodia. https://t.co/Zg37RgDFxs pic.twitter.com/em2y02zI93
— 401_da_sarpanch (@401_da_sarpanch) October 25, 2024
இதையும் படிங்க: தடம்புரண்ட சரக்கு இரயில்.. டிவி உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை களவாடிய மக்கள்..!