மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
82 வயது மூதாட்டியை அறுவை சிகிச்சையின்போது தாக்கிய மருத்துவர்; 4 ஆண்டுகள் கழித்து அம்பலமான உண்மை.!
சீனாவில் உள்ள குயிகாங் பகுதியைச் சார்ந்த 82 வயது மூதாட்டி உடல்நலக்கோளாறு காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மூதாட்டிக்கு கண் சார்ந்த பிரச்சனை இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சையின்போது மருத்துவர், மூதாட்டியின் மீது ஆத்திரம் கொண்டு மூன்று முறை அவரது தலையில் அடித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின் தற்போது சமூகவலைதளங்கள் வாயிலாக வீடியோ வெளியாகி விஷயம் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் மருத்துவரின் செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு அமெரிக்க மதிப்பில் 70 டாலர் இழப்பீடும் வழங்கியிருக்கிறது. மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.