திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இத்தாலியில் இந்திய மாணவர் மர்ம மரணம்: குளியலறையில் சடலமாக மீட்பு.!
ஜார்கண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ராம் ராவத். இவர் தற்போது இத்தாலியில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பயின்று வருகிறார்.
புத்தாண்டு முதல் ராம் ராவத்திடம் இருந்து குடும்பத்தினர் எந்த விதமான அழைப்பும் பெறவில்லை.
இதனால் பதறிப்போன குடும்பத்தினர், அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் நம்பரை கண்டறிந்து விபரத்தை கூறி இருக்கின்றனர்.
இதனையடுத்து, வீட்டின் உரிமையாளர் ராம் ராவத்தின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் குளியல் அறையில் சடலமாக கிடந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.