மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: தறிகெட்டு இயங்கி 20 பயணிகளுடன் ஆற்றில் விழுந்த பேருந்து; பலர் பலி, அதிர்ச்சி காட்சிகள் உள்ளே.!
ரஷியா நாட்டில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், பேருந்து ஒன்று 20 பயணிகளுடன் பயணம் செய்தது. இந்நிலையில், ஆற்றின் அருகே சென்றுகொண்டு இருந்த பேருந்து, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரியவருகிறது.
ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து:
இதனால் தறிகெட்டு இயங்கிய பேருந்து, எதிர்திசையில் வந்த காரின் மீது மோதியது. பின் அதிவேகத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஆறில் மூழ்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
BREAKING: Bus falls into a river in St. Petersburg, Russia – multiple dead and injured pic.twitter.com/6j5cMnLRm2
— Insider Paper (@TheInsiderPaper) May 10, 2024
6 பேரின் நிலை என்ன?
மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்குள், பயணிகளில் சிலர் நீரில் தத்தளித்து மயங்கி இருக்கின்றனர். இதனால் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் மயக்க நிலையிலேயே இருப்பதால் உயிர்பலி அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
குற்றவிசாரணை நடைபெறுவதாக அறிவிப்பு:
பேருந்து விபத்தில் சிக்கியது எப்படி? கட்டுப்பாட்டை இழந்ததா? அல்லது விஷமிகளின் செயலா? என குற்ற விசாரணையும் நடைபெற்று வருவதாக அங்குள்ள நிலவரங்கள் தெரிவிகின்றன.
இதையும் படிங்க: சிறுமியை கடித்துக்குதறி கொலை செய்ய முயன்ற நாய்கள்: அலட்சியமாக செயல்படும் பெற்றோர்களே உஷார். அதிர்ச்சி வீடியோ வைரல்.!