திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருடவந்த வீட்டில் அயர்ந்து உறங்கிய திருடன் அதிரடி கைது: வடிவேல் காமெடி பாணியில் நடந்த கலகலப்பு சம்பவம்.!
சீனாவில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள யுனான் மாகாணத்தில் வசித்து வரும் நபர் இரவில் உறங்கிவிட்டு, காலையில் எழுந்து தனது வீட்டின் மற்றொரு அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது, தனது வீட்டிற்குள் திருடன் நுழைந்ததை உணர்ந்துகொண்ட அவர், திருடன் சுருட்டு பிடித்த போதையில் உறங்கிக்கொண்டு இருப்பதையும் கவனித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் திருடனை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் பல திருட்டு செயல்களில் ஈடுபடும் யாங் என்பது தெரியவந்தது. அவரின் மீது பல்வேறு குற்றசாட்டுகள் உள்ள நிலையில், 2022ல் சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில் தான் பிணையில் வெளியே வந்துள்ளார்.
இதற்குள்ளாக மீண்டும் திருட்டு செயலில் களமிறங்கிய திருடன், சுருட்டு பிடித்த போதையில் குட்டித் தூக்கம் போட்ட காரணத்தால் பக்குவமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.