96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
காரில் இருந்து கார்பன் மோனாக்சைடு வெளியேறி கல்லூரி மாணவர் பலி.. 6 பேர் உயிர் ஊசல்.!!
கனடா நாட்டில் உள்ள ஒண்டாரியோ மாகாணத்தில் வசித்து வரும் இந்திய மாணவர் கார்பன் மோனாக்சைடு தாக்கி பலியாகினார். மேலும் அவரது வீட்டில் இருந்த ஆறு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டின் கராஜ்(Garage) பகுதியில் காரை அவர்கள் இயக்கவிருந்த போது, காரில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு அதிகளவில் பரவி உடனடியாக அனைவரும் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
25 வயதுடைய மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவருடன் தங்கி இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில் தான் அவர் தனது மேல் படிப்புக்காக இந்தியாவிலிருந்து கனடா சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இளைஞரின் மரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.