448 பேர் சுட்டு கொலை.. ஈரானில் நடக்கும் போராட்டத்தில் பயங்கரம்.. அதிரவைக்கும் ரிப்போர்ட்.!



iran-masha-amini-death-protest-448-killed-by-iran-force

 

ஈரான் நாட்டை சேர்ந்த 22 வயது பெண்மணி மாஷா அமினி, சரியாக ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் கண்காணிப்பில் இருக்கும்போது கடந்த செப். மாதம் உயிரிழந்தார். இதனால் அவரை காவலர்கள் அடித்து கொலை செய்துவிட்டதாக தகவல் வெளியாகவே, மக்கள் காவல் துறையினருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். 

இந்த போராட்டமானது பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதால், அந்நாட்டின் அரசு செய்வதறியாது திகைத்து வருகிறது. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் பாதுகாப்பு படையினர் மக்களை கட்டுப்படுத்த வன்முறை நடக்கும் இடங்களில் துப்பாக்கி சூடு போன்ற சம்பவத்திலும் ஈடுபடுகின்றனர். 

iran

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் 448 பேர் ஈரானிய படைகளால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் பாதியில் இருந்து நவம்பர் மாதம் 30ம் தேதி வரை பல்வேறு இடங்களில் 448 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இவர்களில் 60 பேர் 18 வயதுக்கும் கீழ் 9 சிறுமிகள் உட்பட சிறார்கள் ஆவார்கள். 29 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை நார்வேயின் ஈரான் மனித உரிமை ஆணையம் உறுதி செய்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது.