இளைஞர்கள் அதிகளவு மதுகுடிக்க வேண்டும் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு..! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!



Japan launches nationwide competition

ஜப்பான் நாட்டில் கொரோனா பொதுமக்கத்திற்கு பின்னர் இளைஞர்கள் மதுஅருந்தும் பழக்கம் குறைந்துள்ளது. மூத்த தலைமுறையினரோடு ஒப்பிடும்போது இளைஞர்கள் குறைவாகவே மது அருந்தி வருவதால், அரசுக்கு வரி வருவாயில் அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளது .

அத்துடன் ஜப்பானில் கடந்த 1995ஆம் ஆண்டு ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 100 லிட்டர் மது அருந்தி வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு நபர் 75 லிட்டர் மது அருந்தியுள்ளார். இதனால் ஜப்பான் நாட்டின் வரி வருவாயில் 3 சதவீதத்தில் இருந்து 1.7 சதவீதமாக குறைந்துள்ளது

இதனையடுத்து வருவாயை பெருக்க இளைஞர்கள் அதிகளவு மது குடிக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதற்காக சேக் விவா என்ற பிரசாரத்தையும் தொடங்கியுள்ளது. இந்த பிரசாரம் மூலம் இளைஞர்களிடம் குடிப்பழக்கத்தை பிரபலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Drinks

மேலும் 20 முதல் 39 வயதுள்ள ஜப்பானியர்களிடம் குடிப்பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? என்று யோசனைகளும் கேட்கப்பட்டுள்ளன. இதற்காக போட்டி ஒன்று அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த யோசனைகள் வழங்குபவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது. போட்டி வரும் செப்டம்பர் 9- ஆம் தேதி நடக்கவிருக்கிறது. 

பல நாடுகளில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரி வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மதுவை ஊக்குவிக்கும் வகையில் ஜப்பான் அரசின் இந்த அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த முடிவுக்கு பல தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.