வாக்கு எண்ணிக்கையில் பின்வாங்கும் டொனால்ட் ட்ரம்ப்.! தமிழ் வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் என்ன கூறியுள்ளார் தெரியுமா?



kamala-harrish-talk-about-vote-counting

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் ஆகியோரின் இரு கட்சிகளுக்கிடையே போட்டி நீடித்து வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார் என தகவல் வெளியானது. இந்தநிலையில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை விட ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். இதனால் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வெற்றியை நோக்கி முன்னணியில் உள்ளார். இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி டிரம்ப் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் தனது மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த சூழலில் தமிழ் வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் டுவிட்டரில், "ஜோ பிடனும் நானும் தெளிவாக உள்ளோம், அதாவது ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.