மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டில் கஞ்சா செடி வளர்க்க அரசு அனுமதி.. எங்கு தெரியுமா?
உலகளவில் பல்வேறு நாடுகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில நாடுகளில் குறிப்பிட்ட போதை பொருட்களை பயன்படுத்த மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் கஞ்சா பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் சிறப்பு தடுப்பு பிரிவு போலீசார் அமைக்கப்பட்டு கஞ்சா போன்ற போதைப் பொருள் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு வருகிறது.
இதற்குக் காரணம் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை போதைப்பொருட்களை பயன்படுத்தி பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில் 18 வயதிற்கும் மேற்பட்டோர் 25 கிராம் உலர்ந்த கஞ்சா வைத்துக் கொள்ளவும், 3 கஞ்சா செடிகள் வரை வீட்டில் வளர்க்கவும் அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பலரும் நள்ளிரவில் திரண்டு கஞ்சா புகைத்து இந்தத் திட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.