மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரும் சோகம்..! ஆற்று வெள்ளத்தில் அலட்சிய பயணம்.. 31 பேர் துடிதுடித்து மரணம்..!
பேருந்து ஆற்றுவெள்ளத்தின் இடையே புகுந்து பாலத்தை கடந்து செல்ல முயற்சிக்கையில் விபத்தில் சிக்கி 31 பேர் பலியாகினர்.
கென்யா நாட்டின் பல்வேறு மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து 200 கி.மீ தொலைவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மக்கள் சென்றுள்ளனர்.
இந்த மக்களோடு தேவாலய பாடல் குழுவினரும் பேருந்தில் பயணம் செய்துகொண்டு இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பயணித்த பேருந்து கிடுய் கவுண்டி அருகே உள்ள என்.சி.யூ ஆற்றுப்பாலத்தின் வழியாக சென்றுள்ளது.
அந்த ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், ஆற்றுப்பாலத்தை தொட்டவாறு நீர் சென்றுகொண்டு இருந்தது. பேருந்தில் அக்கரைக்கு சென்றுவிடலாம் என எண்ணி பேருந்து இயக்கப்பட்ட நிலையில், ஆற்றை கடக்க முயற்சித்தபோது வெள்ளத்தில் பேருந்து அடித்து செல்லப்பட்டு ஆற்றிலேயே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் மொத்தமாக 31 பேர் வரை பரிதாபமாகி வெள்ள நீரில் மூழ்கி பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு 12 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.