என்னப்பா நடக்குது.? வீட்டை இப்படி கூட காலி செய்ய முடியுமா..? வைரலாகும் வீடியோ காட்சி..



Locals shift house on foot in Nagaland village in viral video

கிராமவாசிகள் பலர் ஒன்றுசேர்ந்து வீடு ஒன்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வன சேவை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பதிவில் சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

வீடியோவில், நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் நாகாலாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கால்நடையாக வீடு ஒன்றை தூக்கி செகின்றனர். குழுக்களில் உள்ளவர்கள் வீட்டின் நான்கு மூலைகளையும் பிடித்து ஒரு குன்றின் பாதையில் நடந்து குடிசையை அதன் அசல் இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றினர்.

viral video

இந்த நடவடிக்கைக்கு காரணம் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அது "ஒற்றுமை வலிமை" என்பதைக் காட்டுகிறது, சுதா ராமன் தனது பதிவில் கூறியது போல.

"ஒற்றுமை வலிமை என்பதை நாகர்கள் நமக்குக் காட்டும் மற்றொரு வீடியோ! நாகாலாந்தில் கிராமத்தில் வீடு மாறி வருகிறது" என்று சுதா ராமன் தனது பதிவின் தலைப்பில் கூறியுள்ளார்.

பொதுவாக வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு வேறு இடத்திற்கு மாறுவதைத்தான் நாம் பார்திரும்போம். ஆனால், வீடே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.