ஜப்பானில் உருவாக்கப்பட்ட... அசத்தலான பறக்கும் பைக் அமெரிக்காவில் அறிமுகம்..!!



Made in Japan...Amazing flying bike launched in America...!

உலகின் முதல் பறக்கும் பைக்கை ஜப்பானைச் சேர்ந்த ஏர்வின்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. 

வாஷிங்டன், வாகன போக்குவரத்து குறித்த தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு நாளும் புதிய வளர்ச்சிகளைக் அடைந்து வருகின்றன. எரிபொருள் தேவையை மிச்சப்படுத்தும் வகையில் சூரிய சக்தி, மின்சக்தியில் இயங்கும் வாகனங்கள், மேலும் விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிநவீன சென்சார்கள் மற்றும் கேரமாக்களை கொண்ட தானியங்கி வாகனங்கள் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் தற்போது எதிர்கால தொழில்நுட்பமாக உலகின் முதல் "பறக்கும் பைக்" என்ற வாகனம் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. டெட்ராய்டில் நடந்த வாகன கண்காட்சியில் இந்த பறக்கும் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஜப்பானில் உள்ள ஏர்வின்ஸ் நிறுவனம் இந்த பறக்கும் பைக்கை உருவாக்கி இருக்கிறது. இந்த பறக்கும் பைக், தொடர்ந்து 40 நிமிடங்கள் பறக்கும் திறனை கொண்டது. இதன் விலை  இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.