சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
100 கிலோ கேக்கில் உலக சாதனை... உலக சாதனை படைத்த இந்திய பெண்மணி.! குவியும் பாராட்டுக்கள்.!
கேக்கை வைத்து மிலன் கதீட்ரலின் கட்டிடத்தின் மாதிரியை உருவாக்கிய பெண்மணி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரை சேர்ந்த பெண்மணி பிராச்சி தபால் டெப். இவர் கேக்கை பல்வேறு பொருட்கள் போல வடிவமைக்கும் கலைஞர் ஆவார். இந்நிலையில், தபால் டெப்புக்கு கேக்கை வைத்து மாபெரும் கட்டிடத்தின் பிரதியை உருவாக்கி உலக சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது.
இதனையடுத்து, அதற்கு தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். தற்போது, இங்கிலாந்து நாட்டில் உள்ள இலண்டன் நகரில் ராயல் ஐசிங் கேக் செய்ய தொடங்கி, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
100 கிலோ எடையுள்ள கேக் மூலமாக மிலன் கதீட்ரலின் கட்டிடத்தின் பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த கட்டிடத்தை உருவாக்க தனக்கு ஒரு மாதங்கள் தேவைப்பட்டது என்றும், இந்த சாதனையை செய்ய கடந்த 2015 ஆம் வருடத்தில் இருந்து தான் பயிற்சி எடுத்து வருவதாகவும் கேக் கலைஞர் பிராச்சி தபால் டெப் தெரிவித்தார்.