மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீர் கோடீஸ்வரனான அதிர்ச்சி.! சுருண்டு விழுந்து உயிரிழந்த நபர்.! ஷாக் வீடியோ!!
சிங்கப்பூரில் பிரபல கேசினோ ஒன்றில் திடீரென கோடீஸ்வரனான இன்ப அதிர்ச்சியில் நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் புகழ் பெற்ற பிரபலமான மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் அந்த நபர் விளையாடியுள்ளார். அதில் அவர் 4 மில்லியன் டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாயை வென்றுள்ளார்.
சுருண்டு விழுந்து உயிரிழப்பு
இந்த நிலையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர் சிறிது நேரத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் பதறிப்போய் அவரை காப்பாற்றும்படி அலறுகின்றனர். இந்நிலையில் பதறிப்போன கேசினோ ஊழியர்கள் உடனே அவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
வைரல் வீடியோ
ஆனால் எந்த பலனும் இன்றி துரதிஷ்டவசமாக அந்த நபர் உயிரிழந்தார். மேலும் பெருந்தொகையை வென்ற அதீத அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது.
#WATCH : A man won $4 million at Marina Bay Singapore Casino but suffered a cardiac arrest from the excitement and died.#Casino #Singapore #CardiacArrest #SingaporeCasino #Excitement pic.twitter.com/hLpvwHHN6i
— MH Chronicle (@MHNewsDaily) June 24, 2024