"திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!
"அதற்காக" காதலி மீது ஆத்திரம்.. காதலியின் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்த காதலன்..! டி.என்.ஏ டெஸ்ட்டில் சிக்கி சின்னாபின்னாமான தரமான சம்பவம்..!!

காதல் சண்டையில் கோபமுற்ற சைக்கோ காதலன் காதலியின் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்தார். இதனால் ஆவேசமடைந்த காதலி நீதிமன்ற வழக்கு தொடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. ஆசைக்காக சென்ற சைக்கோ காதலன் சிறுநீர் கழித்து டி.என்.ஏ பரிசோதனையில் சிக்கியதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
காதலர்களுக்குள் சண்டை வருவது சகஜம்தான். சண்டை சச்சரவுகள் இருப்பது வழக்கமாக இருந்தாலும், அந்த சண்டைகள் பெரிதளவில் நீடித்தால் ஒரு கட்டத்தில் பிரேக்கப் செய்து விடுவார்கள். அந்த வகையில் தென்கொரியாவைச் சேர்ந்த ஒரு காதலன் சிக்கியிருக்கிறார்.
தென்கொரியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் Gangnangu என்ற ஒரு பகுதியில் காதலியின் வீட்டிற்கு 31 வயதுடைய காதலன் சென்றுள்ளார். அங்கு இருவரும் நேரம் செலவழித்த நிலையில், திடீரென இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த காதலன் நேராக காதலின் அறைக்கு சென்று அவரது உயர் ரக ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்துள்ளார். முன்பே கோபத்துடன் இருந்த காதலி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போன்ற காதலனின் செயலால் கோபத்தின் உச்சிக்கு சென்றார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண் தனது காஸ்ட்லி ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்ததற்காக நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கம் தொடுத்திருந்தார். அதன்படி வழக்கு விசாரணையில் இருந்துவந்தது. ஆனால் காதலன், தான் சிறுநீர் கழிக்கவில்லை என்றும், காதலியை வெறுப்பேற்றுவதற்காக நடித்தேன் என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டதில் காதலன் பெண்ணின் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்தது நிரூபணமானது. இதனால் காதலன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதோடு அபராதமாக 1150 அமெரிக்க டாலர் விதிக்கப்பட்டது. இந்திய மதிப்பீட்டின் படி 91,634 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.