53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய எலிகள்... தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை.!!
அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாணத்தில் 6 மாத குழந்தையை முறையாக பராமரிக்காததால் எலிகள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய எலிகள்
அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாணத்தைச் சேர்ந்தவர் டேவிட் ஸ்கோனாபாம். இவருக்கு திருமணமாகி ஏஞ்சல் ஸ்கோனாபாம் என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை வீட்டில் இருந்தபோது 50க்கும் மேற்பட்ட எலிகள் கடித்து குதறியது. இதில் பச்சிளம் குழந்தை படுகாயம் அடைந்தது.
வழக்கு பதிவு செய்த காவல்துறை
இதனைத் தொடர்ந்து குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போது குழந்தையின் தந்தை வீட்டில் எலிகள் இருப்பதை அஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: பதற வைக்கும் கொடூரம்... 10 முறை குத்தி கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி.!! 13 வயது சகோதரி கைது.!!
16 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இது தொடர்பான தீர்ப்பை நீதிபதி வெளியிட்டு இருக்கிறார். அந்த தீர்ப்பின்படி குழந்தை இருக்கும் இடத்தில் எலிகள் இருப்பதை அறிந்தும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்த குழந்தையின் தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பு அஜாக்கிரதையாக இருக்கும் தந்தைகளுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: சினிமாவை மிஞ்சும் கொடூரம்... மிக்ஸியில் அரைக்கப்பட்ட உடல் பாகங்கள்... முன்னாள் அழகிக்கு நேர்ந்த துயரம்.!!