மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அகதிகளை ஏற்றி சென்ற ட்ரக் விபத்தில் சிக்கியதில் சோகம்: 10 பேர் பலி.. 25 பேர் படுகாயம்..!
மெக்சிகோவில் உள்ள அமெரிக்கா - மெக்சிகோ கௌதமாலா எல்லைப்பகுதியில், மெக்சிகோவின் பிஜிஜியான்-டோனாலா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கனரக டிரக் ஒன்று பயணம் செய்தது.
இந்த ட்ரக்குக்குள் 40-க்கும் மேற்பட்ட அகதிகள் மறைந்து பயணித்ததாக தெரிய வருகிறது. இந்நிலையில், டிரக் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் டிரக் உள்ளே இருந்த 10 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெண்கள், சிறு குழந்தைகள் உட்பட 10 பேர் விபத்தில் உயிரிழந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.