தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஸ்பாவில் அழகு சிகிச்சை எடுத்த 3 பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு; வாழ்க்கையை இழந்து பரிதவிக்கும் சோகம்.!
இன்றளவில் விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்கள் மக்களின் வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்றி இருக்கிறது. வயதானகாலத்திலும் பெண்கள் மற்றும் ஆண்கள் மேக்கப் போடுவதை முக்கியமாக்கி இருக்கின்றனர். ஒருசிலர் அவ்வப்போது ஸ்பா போன்ற அழகு நிலையத்திற்கு சென்று அதற்கான வழிமுறைகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் உள்ள நியூமெக்சிகோ நகரில் செய்யப்பட்டு வந்த உரிமம் இல்லாத சபாவில், வாம்பயர் பேஷியல் செய்த 3 பெண்களுக்கு எச்.ஐ.வி நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை காஸ்மெட்டிக் ஊசியால் வைரஸ் பரவியிருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டு கோடை காலத்தில் 40 வயதுள்ள பெண்மணிக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு ஊசியினால் இந்நோய் பரவியதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். விசாரணையில், வாம்பயர் பேஷியல் செய்த நபர்களுக்கு, அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்ட ஊசி வழியாக பரவியது தெரியவந்ததது.
தற்போது இந்த விஷயத்தை உறுதி செய்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், உரிமம் இல்லாத ஸ்பாக்களில் மக்கள் எந்த விதமான அழகு சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளது.