திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சேர்ந்து வாழ மறுத்த இளம் பெண்... நேர்ந்த கொடூரம்... தப்பியோடிய கணவர்.!
இலங்கையின் புத்தளம் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் கணவரால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தப்பி சென்ற கணவனை கைது செய்ய காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
இலங்கை நாட்டின் புத்தளம் பிரதேசத்தில் உள்ள ஹட்டன் வட்டவளை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சத்தியவேலு நதிகா(32). இவருக்கு அப்போ உதவி சார்ந்த ஒருவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு தொடர்ந்து தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
மேலும் அங்குள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து தனது குழந்தைகளை காப்பாற்றி வந்ததாக தெரிகிறது. இவரது கணவர் பலமுறை தொலைபேசியின் மூலம் அழைத்தும் அவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். இதனால் பலமுறை இந்தப் பெண்ணிற்கு கொலை மிரட்டல் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று அதிகாலை இரண்டு மணிக்கு வழக்கம் போல தனது பணிக்கு சென்றிருக்கிறார் நதிகா. அப்போது கூர்மையான ஆயுதத்துடன் மறைந்திருந்த அவரது கணவர் இந்தப் பெண்ணை தாக்கி பலமுறை கத்தியால் குத்தி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த சத்தியவேலு நதிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரதேசத்தில் இருந்து தப்பி ஓடிய அவரது கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.